உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி அருகே நெட்டூர் கண்மாயில் மரங்கள் தீப்பற்றியது

இளையான்குடி அருகே நெட்டூர் கண்மாயில் மரங்கள் தீப்பற்றியது

இளையான்குடி : இளையான்குடி மற்றும் நெட்டூர் கண்மாய்களில் தீ பற்றி எரிந்ததை தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.இளையான்குடி பெரிய கண்மாய் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாய பணிகள் முடிந்து, கண்மாயில் தண்ணீரின்றி சீமை கருவேல் மரங்கள் வளர்ந்துள்ளன.கண்மாய்க்குள் சென்ற மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றனர். இதில், தீ மளமளவென பிடித்து கண்மாய்க்குள் இருந்த சீமைகருவேல மரங்கள், நாணல் செடிகள் தீப்பற்றி எரிந்தன.கிராமத்தினர் கொடுத்த தகவலின் பேரில், இளையான்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில், வீரர்கள் 5 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தீவிபத்தால் கண்மாய்க்குள் இருந்த மரங்கள் எரிந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை