உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலி ஆவண பாஸ்போர்ட் மேலும் இருவர் கைது

போலி ஆவண பாஸ்போர்ட் மேலும் இருவர் கைது

தேவகோட்டை : தேவகோட்டை தானுச்சாவூரணி ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் இலங்கையைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. க்யூ பிரிவு டி.எஸ்.பி. , பாண்டி, எஸ்.ஐ. செல்லமுத்து லாட்ஜில் போலீசாருடன் சோதனை செய்தனர். இதில் இலங்கையைச் சேர்ந்த தம்காலா ராடம்பலா காமேஷ் மகன் சமீதா எரண்டா.30., அம்பலம்கோடா ஜெயசேகரா மகன் துஷான் பிரதீப்.38., தேவகோட்டை அருகே நாச்சாங்குளம் வெட்டிவயலைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவா 43., மேலும் இவர்களுடன் இலங்கையைச் சேர்ந்த தற்போது சென்னையில் வசிக்கும் செந்துாரான், முகமது அஸ்லாம் ஆகிய ஐந்து பேரும் தங்கி இருந்தது தெரியவந்தது. இவர்கள் லாட்ஜில் தங்கியிருந்தபடியே இவர்கள் இந்தியர்கள் என்று பாஸ்போர்ட் பெற போலி ஆதார், ரேஷன் கார்டு, உட்பட ஆவணங்களை தயார் செய்தது விசாரணையில் தெரியவந்தது. க்யூ பிரிவு போலீசார் சமீதா எரண்டா, துஷாந்த் பிரதீப், சிவா ஆகிய மூன்று பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து போலி ஆவண தயாரிப்பில் துணையாக இருந்த இலங்கையைச் சேர்ந்த முகமது அஸ்லாம் 43., மற்றும் சென்னையைச் சேர்ந்த ஜாகிர் உசேன். 55 இருவரையும் நேற்று க்யூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை