| ADDED : செப் 14, 2024 05:02 AM
காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் வார விடுமுறைக்கு செல்ல பயணிகள் நேற்று மாலை குவிந்த நிலையில், ஒரேயொரு டிக்கெட் கவுன்டர் மட்டுமே செயல்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டனர். காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் வழியாக 20க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் சென்று வருகிறது.காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் 2 டிக்கெட் கவுன்டர்கள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு டிக்கெட் கவுன்டர் மட்டுமே செயல்படுகிறது.நேற்று மாலை திருச்சி, தாம்பரம், திருவாரூர், விருதுநகர் உள்ளிட்ட 4 ரயில்கள் சென்றதால் ஏராளமான பயணிகள் குவிந்தனர்.வார விடுமுறையையொட்டி பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள் சுற்றுலா வாசிகள் என ஏராளமானோர் ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர். ஒரே ஒரு டிக்கெட் கவுன்டர் மட்டுமே இருந்ததால் பயணிகள், டிக்கெட் எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர்.