உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் அனுமதி பெறாத காய்கறி சந்தை

திருப்புவனத்தில் அனுமதி பெறாத காய்கறி சந்தை

திருப்புவனம்: திருப்புவனத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தேரடி வீதியில் நடைபெறும் அனுமதி பெறாத சந்தையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை காய்கறி சந்தை அதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் நடந்து வருகிறது. சுற்று வட்டார மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஆனால் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காய்கறி வியாபாரிகள் பலரும் உரிய அனுமதி இன்றி காய்கறி மார்க்கெட், தேரடி வீதி முழுவதும் கடைகளை பரப்பி வியாபாரம் செய்கின்றனர்.காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை நடைபெறும் சந்தையால் இப்பகுதியில் வசிக்கும் பலரும் வீட்டை விட்டு வெளியேறவே முடியவில்லை. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட நுழைய முடியவில்லை.பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என தெரு மக்கள் புலம்புகின்றனர்.எனவே பேரூராட்சி நிர்வாகம் வெள்ளிகிழமை ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதை நிறுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ