| ADDED : ஜூலை 01, 2024 10:22 PM
கீழடி:கீழடி பத்தாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில் அகழாய்வு தளத்தில் பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில்பத்தாம் கட்ட அகழாய்வு பணி ஜூன் 18ம் தேதி தொடங்கியது. ஜவஹர், பிரபாகரன், கார்த்திக் ஆகியோரது நிலங்களில் 12 குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக இரு குழிகள் மட்டும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை பாசிகள், கண்ணாடி மணிகள், தமிழி எழுத்து கொண்ட பானை ஓடு உள்ளிட்டவை கிடைத்துள்ளன. செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளன. அகழாய்வு தளத்தில் தொல்லியல் துறை சார்பில் பெயர் பலகை வைக்கப்படுவது வழக்கம், பத்தாம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டு பத்து நாட்களுக்கு மேலாகியும் பெயர் பலகை வைக்கப்படவே இல்லை. இது தொடர்பாக பலரும் முறையிட்டதை தொடர்ந்து அகழாய்வு தளத்தில் பெயர் பலகை பொருத்தப்பட்டது.