உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சேதமடைந்த நிழற்குடை கிராம மக்கள் அவதி

சேதமடைந்த நிழற்குடை கிராம மக்கள் அவதி

பழையனுார், : பழையனுார் அருகே ஆனைகுளம், மேலசொரிக்குளம் உள்ளிட்ட ஊர்களில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்துஉள்ள நிலையில் புதிய நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு ஊரிலும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பழையனுார் அருகே ஆனைகுளம் மற்றும் மேலசொரிக்குளத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடை சமீபத்திய மழையால் சேதமடைந்தது.திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிழற்குடை சேதமடைந்த நிலையில் பொதுமக்களும், மாணவ, மாணவியரும் அருகில் உள்ள வீடுகள், கடைகளில் ஒதுங்கி நிற்க வேண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கிராமப்புறங்களில்புதிய நிழற்குடைகள் அமைக்கப்படவே இல்லை. அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சேதமடைந்த நிழற்குடைகளை அகற்றி விட்டு புதிய நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை