உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேர்தல் விதி மீறல்: 105 வழக்கு பதிவு

தேர்தல் விதி மீறல்: 105 வழக்கு பதிவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் நடைபெறுவதையொட்டி மார்ச் 16 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. மாவட்டத்தில் உள்ள 4 எம்.எல்.ஏ., தொகுதிக்கும் 3 பறக்கும் படைக்குழு, 3 நிலையான கண்காணிப்புக் குழு, 4 வீடியோ மதிப்பீட்டுக்குழு, ஒரு வீடியோ பார்வையிடும் குழு என மொத்தம் 36 குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளை மீறி தனியார் சிலர் தங்களது வீட்டு நிகழ்ச்சிகளுக்கு பிளக்ஸ் வைத்தது, கூடுதல் வாகனங்களில் பிரசாரம், சாலையை மறித்து பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறல் செய்ததாக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை