உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் தயாராகும் ஓட்டு எண்ணிக்கை மையம்

காரைக்குடியில் தயாராகும் ஓட்டு எண்ணிக்கை மையம்

காரைக்குடி: லோக்சபா தேர்தலையொட்டி, காரைக்குடியில் பாதுகாப்பு அறை மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையம் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.சிவகங்கை லோக்சபா தொகுதியில், சிவகங்கை காரைக்குடி திருப்புத்துார் மானாமதுரை ஆலங்குடி திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஏப். 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. சிவகங்கை தொகுதியில் உள்ள ஆயிரத்து 873 ஓட்டு சாவடிகளில், 16 லட்சத்து 23 ஆயிரத்து 408 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லூரி, மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்படும் பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். இந்த பாதுகாப்பு அறையில், மின் இணைப்பு காற்றோட்டம் கூட இருக்காது. சிறு துவாரம் கூட இல்லாத அளவில் ஜன்னல்கள் பிற நுழைவாயில்கள் முற்றிலுமாக செங்கல் சிமென்ட் மூலம் அடைக்கப்படும்.பாதுகாப்பாக வைக்கப்படும் இயந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கை அன்று வெளியே பாதுகாப்புடன் கொண்டு வரப்படும். மேலும் தொகுதி வாரியாக கவுன்டிங் சென்டர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரியில், சிவகங்கை மானாமதுரை திருப்புத்துார், காரைக்குடி ஆகிய நான்கு சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆலங்குடி மற்றும் திருமயம் தொகுதியில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். தற்போது, ஓட்டு எண்ணிக்கை மையம் மற்றும் பாதுகாப்பு அறை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை