உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொள்ளை வழக்கில் பெண் கைது

கொள்ளை வழக்கில் பெண் கைது

மானாமதுரை : மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் முத்து, இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மகன் மருதுபாண்டி மதுராந்தகத்தில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். ஜூலை 4ம் தேதி இரவு இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 43 பவுன் நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.மானாமதுரை போலீசார் ஜூலை 19ம் தேதி சிவகங்கை கீழக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் கலையரசன்42, என்பவரை கைது செய்து 33 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.மேலும் மீதமுள்ள 10 பவுன் நகைகளோடு மாயமான இக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய சூடியூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் 19, அவரது தாயார் செல்வி 37, மற்றும் ஏனாதி கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்தன மகாலிங்கம் 27, ஆகியோரை தேடி வந்த நிலையில் செல்வி என்பவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி