உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை கலெக்டர் அலுவலகம்  முன் பெண் தற்கொலை முயற்சி  

சிவகங்கை கலெக்டர் அலுவலகம்  முன் பெண் தற்கொலை முயற்சி  

சிவகங்கை : காணாமல் போன தன் மகளை கண்டுபிடிக்காத போலீசை கண்டித்து, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் பெண் உடலில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.சிவகங்கை அருகே பாசாங்கரை சுவாமிநாதன். அவரது மனைவி கலையரசி. சுவாமிநாதன் டில்லியில் ஓட்டலில் பணிபுரிகிறார். தனது இரு மகள்களுடன் கலையரசி பாசாங்கரையில் வசித்து வருகிறார். மார்ச் 3 ம் தேதி கலையரசி தனது முதல் மகளுடன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த இளைய மகளை காணவில்லை.அவரை கண்டுபிடித்து தருமாறு கலையரசி சிவகங்கை நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மனுவிற்கான ரசீது மட்டுமே வழங்கினர். வழக்கு பதியவும் இல்லை. காணாமல் போன பெண் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. அதிருப்தியான அப்பெண், நேற்று காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன் உடலில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு, சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி