உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையார்கோவிலில் ஆடித் தேரோட்டம் வடம் பிடித்து இழுத்த பெண்கள்  

காளையார்கோவிலில் ஆடித் தேரோட்டம் வடம் பிடித்து இழுத்த பெண்கள்  

சிவகங்கை : காளையார்கோவில் சொர்ணவல்லி, காளீஸ்வரர் கோயிலில் ஆடி உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று அம்மன் தேரை ஏராளமான பெண்கள் இழுத்தனர்.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட காளையார்கோவில் சொர்ணவல்லி காளீஸ்வரர் கோயிலில் ஆடி உற்ஸவ விழா ஜூலை 29 அன்று காலை 9:15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. விழாவின் 9ம் நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சொர்ணவல்லி அம்பாள் அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை செய்தனர். நேற்று காலை 8:45 மணிக்கு சப்பரத்தில் விநாயகர், மாணிக்கவாசகர் முன்செல்ல, அலங்கரிக்கப்பட்ட அம்பாள் தேரை அனைத்து பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து, நேற்று காலை 9:35 மணிக்கு நிலையை அடைந்தது. பக்தர்கள் தேங்காய், வாழைப்பழம் வீசி நேர்த்தி செலுத்தினர்.இன்று காலை காளீஸ்வரர் சொர்ணவல்லி கோயிலில் ஆடிப்பூர சிறப்பு அர்ச்சனை நடைபெறும். ஆக., 8 அன்று ஆடித்தபசு காட்சியும், ஆக., 9 அன்று மதியம் 12:00 மணி முதல் 1:00 மணிக்குள் திருக்கல்யாணம், இரவு 10:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடைபெறும். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் பாலசரவணன், ஸ்தானிகர் காளீஸ்வர குருக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை