உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோட்டையம்மன் கோயிலில் பெண்கள் பொங்கல் வழிபாடு

கோட்டையம்மன் கோயிலில் பெண்கள் பொங்கல் வழிபாடு

தேவகோட்டை, : தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா 22 ம் தேதி மேடை போடுதல் 23 ந்தேதி காப்புக்கட்டுதல் மற்றும் முதல் பொங்கலுடன் தொடங்கியது. ஒரு வாரம் தினமும் அம்மன் முன்பு பலிபீடத்திற்கு காலை மாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி இரண்டாம் செவ்வாய்க்கிழமையான நேற்று அம்மனுக்கு கண் திறக்கப்பட்டது .சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. மதியம் 12:00 மணிக்கு புள்ளிப் பொங்கலாக கோயிலில் வைக்கப்பட்டது.தொடர்ந்து தேவகோட்டை நகரத்தைச் சேர்ந்த இரண்டாயிரம் பெண்கள் ஒரே நேரத்தில் கோயிலைச் சுற்றிலும் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து பெண்கள் இரவு வரை பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக 108, 1008 என கோயிலை சுற்றி வந்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ