உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்டத்தில் 1154 சாலை விபத்து 358 பேர் பலி: 791 பேர் காயம்

மாவட்டத்தில் 1154 சாலை விபத்து 358 பேர் பலி: 791 பேர் காயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்து 154 சாலை விபத்துக்களில் 358 பேர் பலியாகினர். 791 பேர் காயம் அடைந்தனர்.சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவு, அதி வேகம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவைகளால் தினந்தோறும் விபத்துக்கள் நடக்கின்றன.கடந்த ஆண்டு நடந்த ஆயிரத்து 154 விபத்துக்களில் 358 பேர் பலியாகியுள்ளனர். 791 பேர் காயமடைந்துள்ளனர். இதில் டூவீலர் விபத்துக்களில் இறந்தவர்களே அதிகம். டூவீலர் மீது கார், வேன், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை மோதியது மற்றும் கட்டுப்பாட்டை இழந்து மரம், தடுப்புச்சுவரில் மோதியது உள்ளிட்ட சம்பவங்களால் இந்த விபத்துக்கள் நடந்துள்ளன.சாலைகளில் நடந்து சென்றவர்கள், டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றவர்களும் விபத்தில் மரணமடைந்துள்ளனர். மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்புவனம், மானாமதுரை பகுதிகள், மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை, காளையார்கோவில் பகுதிகள், மதுரை, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருப்புத்துார், காரைக்குடி பகுதிகளில் விபத்துக்கள் அதிகம் நடந்துள்ளன.டூவீலர் விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களில் 90 சதவீதம் பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை