| ADDED : ஜன 23, 2024 04:36 AM
சிவகங்கை: சிவகங்கையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார். கோட்டாட்சியர், தாசில்தார்கள், சர்வ கட்சியினர் பங்கேற்றனர்.சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளில் கடந்த ஆண்டு அக்., 27 நிலவரப்படி 5 லட்சத்து 73 ஆயிரத்து 291 ஆண், 5 லட்சத்து 93 ஆயிரத்து 318 பெண், 51 இதரர் என 11 லட்சத்து 66 ஆயிரத்து 660 வாக்காளர்கள் இருந்தனர். அதற்கு பின் தேர்தல்கமிஷன் உத்தரவுபடி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம்,திருத்தம், முகவரி மாற்றத்திற்காக மனுக்கள் பெறப்பட்டன.நான்கு சட்டசபை தொகுதிகளிலும் 38 ஆயிரத்து 103 மனுக்கள்பெறப்பட்டன. தேர்தல்அலுவலர்கள் ஆய்வுக்கு பின் 37 ஆயிரத்து 449 மனுக்கள் மட்டுமே தகுதியுள்ளவை என ஏற்கப்பட்டன. தகுதியின்றி 654 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர் திருத்த முகாம் மூலம் 9,151 ஆண், 11,236 பெண், இதரர் 4 வாக்காளர்கள் என 20 ஆயிரத்து391 புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து 3,301 ஆண், 3,852 பெண், 1 இதரர் என 7 ஆயிரத்து 154 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் விபரங்களை அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் பிரிவினர் ஒப்படைத்தனர். தேர்தல் பிரிவு தாசில்தார் மேசியாதாஸ் நன்றி கூறினார்.