உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடியில் திருட்டு மின்சாரத்தில் எரியும் 160 விளக்கு: தி.மு.க., பெண் கவுன்சிலர்

இளையான்குடியில் திருட்டு மின்சாரத்தில் எரியும் 160 விளக்கு: தி.மு.க., பெண் கவுன்சிலர்

இளையான்குடி : இளையான்குடி பேரூராட்சி கூட்டத்தில் தனது வார்டில் புதிதாக தெரு விளக்குகள் அமைப்பது மற்றும் திட்டப்பணிகள் நடைபெறாததை கண்டித்து தி.மு.க., பெண் கவுன்சிலர் இஸ்ரின் பேகம் வெளிநடப்பு செய்து அலுவலக வாயிலில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் (பொ)சண்முகம், சுகாதார ஆய்வாளர் தங்கதுரை வரவேற்றனர்.கூட்டத்தில் தி.மு.க., பெண் கவுன்சிலர் இஸ்ரின் பேகம் பேசும் போது, தனது வார்டில் கடந்த 2வருடங்களாக புதிதாக தெரு விளக்குகள் மற்றும் மின் கம்பங்கள் அமைப்பது குறித்தும், பல்வேறு திட்ட பணிகள் குறித்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 160 க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் திருட்டு மின்சாரத்தில் இயங்கி வருவதால் அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்து அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் நடந்த விவாதம்

* நாகூர் மீரா, அ.தி.மு.க., கவுன்சிலர்: புதுமடை, சதுரமடை வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களுக்கு கூடுதலாக வட்டி போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தலைவர் நஜூமுதீன்: பரிசீலிக்கப்படும்.* ராஜவேலு,பேரூராட்சி கவுன்சிலர்: இளையான்குடியில் கழிவுநீர் தொட்டி தோண்டும்போது 2 தொழிலாளர்கள் பலியானதை தொடர்ந்து உடனடியாக இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.* பேரூராட்சி தலைவர் நஜூமுதீன்: நடவடிக்கை எடுக்கப்படும். * பேரூராட்சி கவுன்சிலர் ஜலாலுதீன்: எனது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி பகுதியில் மோட்டார் ஓடாததால் கடந்த ஒன்றரை மாதங்களாக தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.* செயல் அலுவலர் சண்முகம் (பொ): மோட்டார்கள் பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இளையான்குடி உதவி மின் பொறியாளர் காமாட்சி கூறியதாவது: இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறைகேடாக பயன்படுத்தப்படும் தெரு விளக்குகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென்று பேரூராட்சி செயல் அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மின்வாரியம் மூலம் இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ