பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 17 ஆயிரத்து 934 பேர் பங்கேற்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 17 ஆயிரத்து 934 மாணவர்கள் எழுத உளளனர்.தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 28 தொடங்கி ஏப்.15 வரை நடக்க உள்ளது. இத்தேர்வை சிவகங்கை மாவட்டத்தில் 131 அரசுப்பள்ளிகள், 34 அரசு உதவி பெறும் பள்ளிகள், 74 தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 278 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 30 மாணவர்கள், 8 ஆயிரத்து 904 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 934 பேர் எழுதுகின்றனர்.105 தேர்வு மையங்களில் தேர்வு நடக்க உள்ளது. 250 பேர் தனித்தேர்வர்களாக தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வு கண்காணிப்பில் 105 முதன்மை கண்காணிப்பாளர்கள், 105 துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும் படை குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.