மேலும் செய்திகள்
அலைபேசி வெளிச்சத்தில் மருத்துவமனையில் சிகிச்சை
05-Dec-2024
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான பாலமுருகன் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தங்கமணி என்பவருக்கும் ஊரில் நடந்த முளைப்பாரி திருவிழாவின் போது பிரச்னை ஏற்பட்டது. இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு ரயில்வே ஊழியர் பாலமுருகன் கீழப்பசலை அய்யனார் கோயில் அருகே உரமூடையை துாக்கி கொண்டிருந்த போது தங்கமணி மகன்கள் தர்ஷித் (எ) தர்ஷித் கண்ணன் 19, மற்றொரு மகன் 17 வயது சிறுவன் ஆகியோர் தலையில் வெட்டினர்.இதில் காயமடைந்த பாலமுருகன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
05-Dec-2024