உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 32 மாணவர்களுக்கு  ரூ.2.10 கோடி கல்விக்கடன்

32 மாணவர்களுக்கு  ரூ.2.10 கோடி கல்விக்கடன்

சிவகங்கை : சிவகங்கையில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் 32 மாணவர்களுக்கு ரூ.2.10 கோடி கல்வி கடனுதவிக்கான ஆணை வழங்கப்பட்டது.சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்லுாரி மாணவர்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மாணவர்களுக்கு கல்வி கடனுதவிக்கான ஆணையை வழங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி முன்னிலை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல துணை மேலாளர் செல்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அன்பு, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா, நகராட்சி துணைத் தலைவர் கார்கண்ணன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை வடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் 32 மாணவர்களுக்கு ரூ.2.10 கோடி கல்வி கடன் ஆணை வழங்கப்பட்டது. கடந்தாண்டு மாவட்டத்தில் நான்கு முகாம் நடத்தப்பட்டு 2260 மாணவர்களுக்கு ரூ35.64 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடப்பாண்டில் 3 ஆயிரம் மாணவர்களுக்கு கல்விக்கடன் உதவிகள் வழங்க இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை மொத்தம் 956 மாணவர்களுக்கு ரூ.14.65 கோடி கல்விக்கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !