உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  5 தலையாரி பணியிடம் 247 பேர் போட்டி

 5 தலையாரி பணியிடம் 247 பேர் போட்டி

காரைக்குடி: காரைக்குடி தாலுகாவில் உள்ள 5 தலையாரி காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த டிச. 13ம் தேதி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. 5 பணியிடத்திற்கு 323 பேர் விண்ணப்பித்திருந்தனர். 76 பேர் தேர்வு எழுதவில்லை. 247 பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்கு திற னறிதல் தேர்வு மற்றும் வாசிப்பு திறன் தேர்வு டிச. 29 முதல் டிச. 30 வரை காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. இதில், தேர்வுக்கு வந்தவர்கள், சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் ஓட்டி காட்டினர். இருசக்கர வாகன லைசென்ஸ் உள்ளவர்கள் நேரடியாக வாசிப்பு திறன் தேர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பல பெண்கள் சைக்கிள் ஓட்ட முடியாமல் திணறினர். இன்றும் நாளையும் திறனறிதல் போட்டி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி