உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தரைப்பாலம் சேதத்தால் 3 கி.மீ., சுற்றும் மக்கள்

தரைப்பாலம் சேதத்தால் 3 கி.மீ., சுற்றும் மக்கள்

சிவகங்கை : காளையார்கோவில் அருகேயுள்ள மேலமருங்கூர் ஊராட்சி பிடிக்குளம் சூரக்குடி இணைப்பு ரோட்டில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் மேலமருங்கூர் ஊராட்சிக்குட் பட்டது பிடிக்குளம் கிராமம்.இந்த கிராமத்தில் இருந்து செல்லும் சூரக்குடி இணைப்பு தரைப்பாலம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இந்த பாலம் வழியாகத்தான் மூவலுார், முடிதானை, வனிக்குடி கிராம மக்கள் காளையார்கோவில், சூராணம் பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.மழை பெய்தால் செல்ல முடியாது. ரோடு முழுவதும் சேதம் அடைந்துள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வேகமாக செல்ல முடியாத சூழல் உள்ளது.கிராம மக்கள் கூறுகையில், இந்த தரைப்பாலம் வழியாகத்தான் 5 கிராம மக்கள் காளையார்கோவில், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி கூலி வேலைக்கு செல்கிறோம்.கிராமத்தில் உள்ள மாணவர்கள் மழை காலங்களில் தண்ணீர் நின்றால் 3 கிலோ மீட்டர் சுற்றி பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் சூழல் உள்ளது.மழை பெய்தால் எங்கள் பகுதி தீவு போல் மாறிவிடும். பல முறை மக்கள் குறைதீர்க்கும் முகாமில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மழைக்காலம் வருவதற்குள் எங்கள் பகுதிக்கு பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை