உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கு 4 பேர் குண்டாசில் சிறை

 பா.ஜ., நிர்வாகி கொலை வழக்கு 4 பேர் குண்டாசில் சிறை

சிவகங்கை: காரைக்குடியில் பா.ஜ., நிர்வாகி பழனியப்பன் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். காரைக்குடி அருகே அரியக்குடி பா.ஜ., நிர்வாகி பழனியப்பன். இவரை கொலை செய்த வழக்கில், தேவகோட்டை அருகே கல்லிகுடியை சேர்ந்த பாண்டி மகன் செல்வக்குமார் 27, காரைக்குடி கலைமணி நகர் அழகப்பன் மகன் சாந்தகுமார் 43, திருவேகம்புத்துார் வெள்ளைச்சாமி மகன் கோட்டைபாண்டி, உஞ்சனை சுரேந்திரன் மகன் கணேசன் 40, ஆகிய 4 பேர்களை கைது செய்தனர். இந்த நான்கு பேர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்