உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  காளையார்கோவிலில் 5 பவுன் திருட்டு

 காளையார்கோவிலில் 5 பவுன் திருட்டு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பக்கத்து வீட்டிலிருந்த 5 பவுன் செயினை திருடியதாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்து கணவரை கைது செய்தனர். மனைவியை தேடி வருகின்றனர். காளையார்கோவில் மீனாட்சிநகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி 47. இவரது வீட்டிற்கு அருகே திருச்சேங்கோடு அருகே வடுகபட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி, அவரது மனைவி சுகுணா 40, ஆகியோர் குடியேறினர். டிச., 2 அன்று அதிகாலை 5:30 மணிக்கு ஆரோக்கியசாமியும், அவரது மனைவியும் நடைபயிற்சிக்கு சென்றனர். பின் வீட்டிற்கு திரும்பிய போது அலமாரியில் கழற்றி வைத்திருந்த 5 பவுன் தங்க செயின் திருடுபோயிருந்தது. பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் முத்துச்சாமி, அவரது மனைவி ஆரோக்கியசாமி வீட்டிற்குள் சென்று வந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து காளையார்கோவில் போலீசில் ஆரோக்கியசாமி புகார் செய்தார். போலீசார் விசாரித்து முத்துச்சாமி, அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்தனர். முத்துச்சாமியை கைது செய்து சுகுணாவை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ