உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காப்பர் வயர் திருடிய 8 பேர் கைது

காப்பர் வயர் திருடிய 8 பேர் கைது

திருப்புத்துார் : சிவகங்கை மாவட்டத்தில் பல சோலார் உற்பத்தி நிலையங்களில் காப்பர் வயர் திருடிய 8 பேரை கைது செய்த போலீசார் 95 கிலோ காப்பர் வயரையும், ரூ 2 லட்சத்தையும், டூ வீலர்களையும் பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோலார் மின் உற்பத்தி நிலையங்களில் காப்பர் வயர்கள் திருடப்பட்டுள்ளது.இது குறித்து சிவகங்கை தாலுகா, திருக்கோஷ்டியூர், பூவந்தி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருக்கோஷ்டியூர் எஸ்.ஐ.சக்திவேல் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அதில் ஒரு கும்பல் வயர்களை திருடி விற்று வருவது தெரியவந்தது. இது தொடர்பாக தமறாக்கி அருகே கக்கனாம்பட்டியை சேர்ந்த ஆண்டி மகன்கள் ஆண்டிச்சாமி27, கார்த்திக்19, சோழபுரம் மேலத்தெருவை சேர்ந்த பாண்டி மகன் கணேசன்22, மற்றும் காளீஸ்வரன்19 கக்கனாம்பட்டியைச் சேர்ந்த பஞ்சு மகன்கள் இளையராஜா20, சின்னச்சாமி26, மற்றும் கருப்பச்சாமி மகன் ஏழுமலை , அங்காடிமங்களம் மலையநாதன் மகன் வன்னியராஜா42 ஆகிய எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 95 கிலோ மதிப்புள்ள காப்பர் கம்பிகள், ரொக்கம் ரூ2 லட்சம் மற்றும் 3 டூ வீலர்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை