உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வேன் கவிழ்ந்து 8 பெண்கள் காயம்

 வேன் கவிழ்ந்து 8 பெண்கள் காயம்

பூவந்தி: பூவந்தி அருகே சமத்துவபுரத்தில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த எட்டு பெண்கள் காயமடைந்தனர். சமத்துவபுரத்தை அடுத்து தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. திருப்பு வனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் அதில் பணிபுரிகின்றனர். தினசரி பெண்களை அழைத்து வர நிறுவனம் சார்பில் வேன் இயக்கப்படுகிறது. நேற்று காலையில் பணி முடிந்து பெண்களை இறக்கி விட வந்த வேன் சமத்துவபுரம் அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்திற்குள்ளா னது. இதில் வேனில் பயணம் செய்த சத்யா 35, ஆதீஸ்வரி 48,செல்வி 46, ராஜகுமாரி 38, மகேஸ்வரி 34, ஜெயலலிதா 40, இந்திராணி 46 ஆகியோர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்