தேவகோட்டையில் ஸ்டேடியம் தேவை
தேவகோட்டை; தேவகோட்டை நகராட்சியில் தற்போது 60 ஆயிரம்பேர் வசிக்கின்றனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த பகுதியில் விளையாட்டு துறையில் பலரும் சாதனை படைத்துள்ளனர்.இங்குள்ளவர்கள் தடகளத்தில்,குழு விளையாட்டில் பதக்கங்கள் வென்று வந்தாலும் முறையாக பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு மைதானம் இல்லை.இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சரான துணை முதல்வர் உதயநிதி தேவகோட்டை பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும் பள்ளி மாணவர் மாணவியர், பெற்றோர், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.