உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  காரைக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு

 காரைக்குடியில் ஆவின் பால் தட்டுப்பாடு

காரைக்குடி: காரைக்குடி ஆவின் பூத்களில், வயலட் நிற பால் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் வாடிக்கையாளர்கள் திரும்பிச் செல்கின்றனர். காரைக்குடி ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் பால் விநியோகம் செய்யப்படுகிறது. காரைக்குடியில் 60க்கும் மேற்பட்ட ஆவின் பூத்கள் உள்ளது. ஆவின் மூலம் 200 மி.லி., 500 மி.லி., எடை கொண்ட வயலட் மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 200 மி.லி., ரூ. 10 க்கும், 500 மி.லி., வயலட் ரூ.22 க்கும் ஆரஞ்சு ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. புதிய வரவாக 100 மி.லி., பால் ரூ.5 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆவின் பூத்களில் வாடிக்கையாளர்களுக்கு முறையாக வயலட் நிற பால் பாக்கெட் கிடைப்பதில்லை. கூடுதல் விலைக்கு விற்கும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் வாங்கிச் செல்ல வேண்டி உள்ளது. பூத் ஏஜன்ட்கள் கூறுகையில்: வழக்கமாக வாங்கும் அளவைவிட, தினமும் 30 முதல் 50 லிட்டர் வரை குறைவாகவே கொடுக்கின்றனர். கேட்டால் மிஷின் பழுதாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆரஞ்சு நிற பால் பாக்கெட் மட்டுமே அதிகம் கொடுக்கின்றனர். அதை அனைத்து தரப்பு மக்களும் வாங்குவதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதிகாரிகள் கூறுகையில்: தட்டுப்பாடு ஏதும் இன்றி முறையாக ஆவின் பால் வழங்கப்பட்டு வருகிறது. குறைவான பால் வழங்கப்படும் பகுதிகளை கண்டறிந்து முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ