| ADDED : ஜன 20, 2024 04:54 AM
திருப்புவனம்: திருப்புவனம் பஸ் ஸ்டாப்பை ஷேர் ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பதால் பஸ்சை ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது.திருப்புவனத்தைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பலரும் வெளியூர் செல்ல திருப்புவனம் வந்துதான் பஸ் ஏற வேண்டும்.திருப்புவனம் வழியாக மதுரை, ராமேஸ்வரம், ராமநாதபுரம், கமுதி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொலை தூர பேருந்துகள் கோட்டை பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். கோட்டை பஸ் நிறுத்தத்தின் இருபுறமும் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை அழைப்பதால் பஸ்களை நிறுத்த முடியாமல் நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். பயணிகள் இறங்கு போது குறுக்கே டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் நுழைவதால் விபத்து ஏற்படுகிறது.ஷேர் ஆட்டோக்களை பஸ் ஸ்டாப்பில் நிறுத்துவது குறித்து பஸ் ஓட்டுனர்கள் கேட்டால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் கூட்டமாக சேர்ந்து மிரட்டுகின்றனர். இதனால் பஸ் டிரைவர்களும் நடுரோட்டில் பயணிகளை இறக்கி விடுகின்றனர். குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் மடப்புரம் காளி கோயிலுக்கு ஏராளமான பெண்கள் வருவதால் பஸ் ஸ்டாப்பின் இருபுறமும் வரிசையாக ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பஸ்கள் கோட்டை பஸ் ஸ்டாப்பை கடந்து செல்ல முடியாமல் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே காவல் துறையினர் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.