| ADDED : பிப் 03, 2024 04:56 AM
திருப்புவனம் : மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் தட்டான்குளம் அருகே பழுதாகி நின்ற வாகனத்தில் மோதி 3 பேர் காயமடைந்தனர். மதுரையில் இருந்து டூ வீலரில் திருப்பாசேத்தியை சேர்ந்த சரண்ராஜ் 33, அபிராமி 28, ருத்ரேஸ் 2, கணவன், மனைவி, குழந்தை என மூவர் ஒரே வாகனத்தில் திருப்பாசேத்தி வந்து கொண்டிருந்தனர். பின்னால் வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்ற போது தட்டான்குளம் அருகே பழுதாகி நின்ற சரக்கு வேனில் மோதியதில் மூவரும் படுகாயமடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தினமலர் இதழில் சுட்டி காட்டியும் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.