உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நான்கு வழிச்சாலையில் விபத்து வேன்-அரசு பஸ் மோதல்

நான்கு வழிச்சாலையில் விபத்து வேன்-அரசு பஸ் மோதல்

திருப்பாச்சேத்தி, : மதுரை--பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்பாச்சேத்தி அருகே அரசு பஸ்சும் சரக்கு வேனும் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் காயமடைந்தனர்.ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை மதுரை சென்ற அரசு பஸ் படமாத்தூர் விலக்கில் திருப்பாச்சேத்தி திரும்ப முயன்ற சரக்கு வேன் மீது மோதியதில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் வேன் ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர். திருப்பாச்சேத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், 4 வழிச்சாலையில் குறிப்பிட்ட 4 இடங்களில் மட்டுமே தினசரி விபத்து ஏற்படுகின்றன. விபத்துகளை தடுக்க வைக்கப்பட்ட பேரிகார்டு எதிரில் வரும் வாகனங்களை மறைக்கின்றன. இதனால் விபத்து நடக்கிறது. பேரிகார்டுகளில் பிரதிபலிப்பான் இருப்பதில்லை. இரவில் அருகில் வந்த பின் தான் பேரிகார்டு இருப்பதே தெரிகிறது. எனவே 4 வழிச்சாலை நிர்வாகம் பேரிகார்டுகளில் நிறம் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை