உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அக்னிவீரபத்திர சுவாமி கோயில் கும்பாபிேஷகம் 

அக்னிவீரபத்திர சுவாமி கோயில் கும்பாபிேஷகம் 

சிவகங்கை: சிவகங்கை காமாட்சி அம்மன் கோயில் குறுக்கு தெருவில் உள்ள அக்னி வீரபத்திர சுவாமி கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. சிவகங்கையில் எட்டு வீட்டு பங்காளிகளின் குலதெய்வமான அக்னி வீரபத்திரர், விநாயகர், மாரியம்மன், பேரத்தாயி அம்மன் கோயில் புன ரமைக்கப்பட்டது. கோயில் சீரமைப்பிற்கு பின் இக்கோயிலில் கும்பா பிேஷகத்திற்கான கணபதி ேஹாமம் செப்., 3ம் தேதி காலை 9:50 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, முதற்கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7:35 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷக விழாவிற்கான பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து கோமாதா பூஜை, மகா பூர்ணாஹூதியும், காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு, விமான கும்பாபிேஷகம் அதனை தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிேஷகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்கும் விழா நடந்தது. மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கினர். பெரியநாயகி அம்மன் சமேத சசிவர்ணேஸ்வரர் கோயில் ஸ்தானிகம் சுப்பிரமணிய ராஜா குருக்கள் சர்வசாதகம் செய்தார். கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை எட்டு வீட்டு பங்காளிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ