வேளாண் அதிகாரிக்கு லஞ்ச வழக்கில் 3 ஆண்டு
சிவகங்கை:சிவகங்கையில் வேளாண் அதிகாரிக்கு லஞ்ச வழக்கில், ௩ ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சிவகங்கையில், 2011ல் வேளாண் இணை இயக்குனராக பணியாற்றிய தங்கசாமி பாண்டியன், 71, தன் கீழ் பணியாற்றிய கவிதா மற்றும் அவரது கணவர் மகேஷ் ஆகியோருக்கு பணிக்கு வராதது மற்றும் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது என்ற குற்றச்சாட்டின் கீழ் 'மெமோ' கொடுத்து, அவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்க லஞ்சம் கேட்டார்.மகேஷ் புகாரில், 10,000 ரூபாயை அவரிடம் இருந்து தங்கசாமி பாண்டியன் லஞ்சம் பெற்ற போது, மறைந்திருந்த போலீசார், தங்கசாமி பாண்டியனை கைது செய்தனர். சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று,தங்கசாமி பாண்டியனுக்கு மூன்று ஆண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்தது.