உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் பஞ்சாங்க வெளியீட்டு விழா

சிவகங்கையில் பஞ்சாங்க வெளியீட்டு விழா

சிவகங்கை: தமிழ்நாடு பிராமணர் சங்க பதிவு சிவகங்கை மாவட்ட அமைப்பின் சார்பில் விசுவாவசு பஞ்சாங்கம் வெளியீட்டு விழா, மாவட்ட தலைவர் தேர்தல் குறித்த அறிவிப்பு, சிவகங்கை கிளை தலைவர் நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். கிளை தலைவர் உஷாரமணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வைத்தியநாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில் இந்த ஆண்டு விசுவாவசு பஞ்சாங்கத்தினை சொக்கநாதபுரம் பிரத்தியங்கிரா கோயில் நிர்வாகி ஐயப்ப ஸ்வாமிகள் வெளியிட மாவட்ட தலைவர் சிவக்குமார், ஹரிஹர வாத்தியார் கிளை நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். புதிய மாவட்ட தலைவராக காரைக்குடி சிவகுமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவகங்கை கிளை புதிய தலைவராக உஷாரமணன் பொறுப்பேற்றார். நிர்வாகிகள் சந்திரா, நரசிம்மன், நாராயணன், சங்கர், மணி, பாஸ்கர், வெங்கடேசன், ராமசுப்பிரமணியன் பேசினர். பொருளாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை