உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

மானாமதுரை : மானாமதுரை பாபா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி ஆண்டு விழா நிறுவனர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. தொழிலதிபர் முருகேசன், மருத்துவ அதிகாரி கண்ணன், மஸ்தூர் யூனியன் மானாமதுரை கிளை தலைவர் பாலமுருகன் கனரா வங்கி மேலாளர் நேதாஜி விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தாளாளர் கபிலன், முதல்வர் மீனாட்சி முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர் பாண்டியம்மாள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !