உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேக விழா

மானாமதுரை : மானாமதுரை அண்ணாமலை நகர் அண்ணாமலையார் விநாயகர் கோயிலில் நடைபெற்ற வருடாபிஷேக விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவை முன்னிட்டு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அர்ச்சகர் நாகமணி தலைமையில் சிவாச்சாரியார்களால் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்களுக்கு பூஜை செய்த பின்னர் அபிஷேகம் நடைபெற்றது.சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை அண்ணாமலை நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை