உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

காரைக்குடி: காரைக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா 24. கர்ப்பிணியான கவுசல்யாவிற்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிரைவர் தியாகம் மற்றும் செவிலியர் சத்யா கர்ப்பிணியை 108 ஆம்புலன்சில் காரைக்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே கவுசல்யாவிற்கு வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் குழந்தையை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ