உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டயாலிசிஸ் மையத்துக்கு பூமி பூஜை

டயாலிசிஸ் மையத்துக்கு பூமி பூஜை

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் டயாலிஸ் மையம் அமைக்க பூமிபூஜை போடப்பட்டது.இங்குள்ள அரசு மருத்துவமனையில் ராஜ்யசபா எம்.பி., சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 60 லட்சம் செலவில் புதிய டயாலிசிஸ் சென்டர்அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதற்கான பூமி பூஜை ஆர்.டி.ஓ., பால்துரை தலைமையில் நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன், எம்.பி.,க்கள் சிதம்பரம்,கார்த்தி ஆகியோர் பூஜையில் அடிக்கல் நாட்டினர். விழாவில் அரசு மருத்துவர் அய்யன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி, காங்., நகரத் தலைவர் தாயுமானவன், பேரூராட்சி துணைத் தலைவர் செந்தில், தாசில்தார் சாந்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை