மேலும் செய்திகள்
வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
18-Dec-2024
சிவகங்கை: வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் இனப்பெருக்கம் செய்த பறவைகள் நாடு திரும்ப தயாராகி வருகின்றன.சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே கொள்ளுக்குடிபட்டியில் பறவைகள் சரணாலயம் செயல்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் பெய்யும் மழை நீர், பெரிய, சின்ன கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடி ஆகிய 3 கண்மாய்களில் சேகரமாகும். இங்கு வளர்ந்துள்ள நாட்டு கருவேல் மரங்களில் வெளிநாட்டு பறவைகள் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்யும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்., மாதத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வெள்ளை அரிவாள் மூக்கன், முக்குளிப்பான் உட்பட ஏராளமான பறவைகள் இங்கு வருகை தரும். இப்பகுதி வயல்களில் இரை தேடி கூடுகட்டும். பின்னர் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இனப்பெருக்கம் முடிந்து ஜன., அல்லது பிப்ரவரி மாதங்களில் தாய் பறவைகள், தங்களது குஞ்சு பறவைகளுடன் சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்லும். 3000 பறவைகள் வருகை
இந்த ஆண்டு இனப்பெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்திருந்தன.இனப்பெருக்கத்திற்கு பின் இங்குள்ள பறவைகளின் எண்ணிக்கை 4000 யை கடந்துவிட்டது. ஜன., இறுதி அல்லது பிப்., முதல் வாரத்தில் வேட்டங்குடி சரணாலயத்தில் இருந்து அனைத்து பறவைகளும் தங்கள் சொந்த நாடுகளுக்கு பறக்க துவங்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
18-Dec-2024