உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதிய சர்ச் கட்ட  தடையின்மை சான்றளித்த அரசுக்கு நன்றி  பிஷப் லுார்து ஆனந்தம் பேச்சு

புதிய சர்ச் கட்ட  தடையின்மை சான்றளித்த அரசுக்கு நன்றி  பிஷப் லுார்து ஆனந்தம் பேச்சு

சிவகங்கை: சிவகங்கை புனித அலங்கார அன்னை சர்ச் வளாகத்தில் புதிதாக பெரிய அளவில் சர்ச் கட்ட தடையின்மை சான்று வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, சிவகங்கை மறைமாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் பேசினார்.சிவகங்கையில் உள்ள பழமையான புனித அலங்கார அன்னை சர்ச் வளாகத்தில், புதிதாக பெரிய அளவில் சர்ச் கட்ட முடிவு செய்து நேற்று அதற்கான கால்கோள் விழா நடந்தது. மதுரை மறை மாவட்ட முன்னாள் பிஷப் அந்தோணி பாப்புச்சாமி துவக்கி வைத்தார்.சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் முன்னிலை வகித்தார். மறை மாவட்ட முன்னாள் பிஷப் சூசைமாணிக்கம், மாநில சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் ஜோ. அருண் சிறப்பு வகித்தனர்.

நன்றி தெரிவித்த பிஷப்

சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் பேசியதாவது: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மறை மாவட்டத்தின் தலைமை கோயிலாக சிவகங்கை புனித அலங்கார அன்னை சர்ச்உள்ளது.இந்த சர்ச்சை பெரிய அளவில் கட்ட வேண்டும் என்ற 35 ஆண்டு கனவை நினைவாக்கும் பணியை பங்கு இறை மக்கள் உதவியுடன் துவக்கி விட்டோம். ஓரிரு ஆண்டிற்குள் புதிய சர்ச் கட்டப்பட்டு, திறக்கப்படும். இப்புதிய சர்ச் கட்ட உடனுக்குடன் தடையின்மை சான்று அளித்த தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்திற்கு மறை மாவட்டம் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். பங்கு பாதிரியார்கள், பங்கு இறைமக்களின் பங்களிப்புடன் இப்புதிய சர்ச் அமையும், என்றார். விழாவில் மறைமாவட்ட முதன்மை குரு அருள்ஜோசப், பொருளாளர் ஆரோன், தலைமையக செயலர் மரிய டெல்லஸ், மாநில தலைவி லீமா, டி.எஸ்.பி., இருதயம் உட்பட பாதிரியார்கள், பங்கு இறை மக்கள் பங்கேற்றனர். சர்ச் பாதிரியார் சேசு ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை