பா.ஜ., பட்ஜெட் விளக்க கூட்டம்
சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் பா.ஜ., பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள்சத்தியநாதன், ராஜரெத்தினம், சொக்கலிங்கம், முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர்கள் சூர்யா, சதீஸ் பட்ஜெட் குறித்து பேசினர். மாவட்ட துணைத்தலைவர் சுகனேஸ்வரி, நகர் தலைவர் உதயா, ஒபிசி அணி செயலாளர் நாகேஸ்வரன், மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், மார்த்தாண்டன், சங்கரசுப்பிரமணியன், நகர் செயலாளர்கள் பாலா, சதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.