உள்ளூர் செய்திகள்

 நுாலக வார விழா

சிவகங்கை: சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் 58வது தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு மாவட்ட சட்ட பணி ஆணை குழு, மாவட்ட மைய நுாலகம், நுாலக நண்பர்கள் திட்டத்தின் சார்பாக நுாலக வார விழா நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுந்தர ராஜன் வரவேற்றார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா, வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகி ராமன், செயலாளர் சித்திரைசாமி, எழுத் தாளர் ஈஸ்வரன், மாவட்ட மைய நுாலகர் வெங்கடவேல் பாண்டி, நுாலகர் முத்துக்குமார் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !