உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு

பூட்டிய வீட்டை உடைத்து திருட்டு

காரைக்குடி :காரைக்குடி கழனிவாசல் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் அனுராதா 65. இவரது கணவர் இறந்த நிலையில், மகன் மதுரையில் வேலை செய்து வருகிறார். வீட்டில் தனியாக இருப்பதற்கு அச்சமடைந்து அருகில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்று விட்டு, காலையில் வீட்டிற்கு வருவது வழக்கம். அனுராதா தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டு நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பீரோ உடைந்து கிடந்தது. வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை