உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாதாளச் சாக்கடை பணிக்காக சிமென்ட் ரோடு உடைப்பு

பாதாளச் சாக்கடை பணிக்காக சிமென்ட் ரோடு உடைப்பு

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள பழமையான சிமென்ட் ரோட்டை உடைத்து பாதாளச் சாக்கடை அமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.காரைக்குடி ரயில்வே பீடர் ரோடு கடந்த 1949ம் ஆண்டு அமைக்கப்பட்ட பழமையான சிமென்ட் சாலையாகும். 70 ஆண்டுகளை கடந்த இச்சாலை பழமையான, பாரம்பரிய சாலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. இந்நிலையில், பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக, சிமென்ட் சாலையின் பல இடங்களிலும் சாலை உடைக்கும் பணி நடந்து வருகிறது.இதற்கு பல்வேறு சமூக அமைப்பினரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்: நகரின் பல இடங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி முடிந்துள்ளது. பாதாளச் சாக்கடை பணி நடைபெறாமல் இருந்த இடத்தில் பணி நடந்து வருகிறது. சாலை முழுவதும் சேதப்படுத்தவில்லை. ஒரு சில இடங்களில் குழாய் இணைப்புக்காக பள்ளம் தோண்ட வேண்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ