உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அண்ணன் கொலை: தம்பி கைது

அண்ணன் கொலை: தம்பி கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணேரியேந்தலில் சொத்துக்காக அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். கண்ணேரியேந்தல் ரங்கன் மகன் ஆறுமுகம் 50. இவருக்கும் இவரது தம்பி கணபதிக்கும் 45, பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் ஆறுமுகம் வீட்டிற்கு சென்ற கணபதி பூர்வீக வீட்டை காலிசெய்யும்படி கூறி தகராறில் ஈடுபட்டார். மேலும் நீ செத்தால் தான் எனக்கு சொத்து முழுசா கிடைக்கும் என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆறுமுகத்தின் தலை மற்றும் கைகளில் வெட்டினார். இதை அறிந்த ஆறு முகத்தின் மற்றொரு சகோதரர் அர்ச்சுணனை கண்டதும் கணபதி தப்பிச் சென்றார். அருகில் இருந்தவர்கள் காயமுற்ற ஆறு முகத்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பரிசோதித்த டாக்டர் ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். அர்ச்சுணன் தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். கணபதியை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி