உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழாயூரில் எரிந்த மரங்கள்

கீழாயூரில் எரிந்த மரங்கள்

இளையான்குடி: கீழாயூர் பகுதியை சேர்ந்தவர் முத்து.இவர் பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் கீழாயூரில் வீட்டிற்கு அருகே ஒரு ஏக்கரில் வனத்துறையினரின் அனுமதியோடு செம்மரம், சந்தனம், மகாகனி, மஞ்சக்கடம்பு, வேம்பு மற்றும் பனை, தென்னை மரங்களை 10 வருடங்களுக்கும் மேலாக வளர்த்து வருகிறார். நேற்று தோட்டத்தில் யாரும் இல்லாத நிலையில் மதியம் 12:00 மணிக்கு சிலர் தீ வைத்ததால் மரங்கள் தீப்பிடித்து எரிந்ததாக முத்துவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இளையான்குடி தீயணைப்பு வீரர்கள் வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை