உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மே 20ல் பஸ்கள் ஓடாது தொழிற்சங்கம் அறிவிப்பு

மே 20ல் பஸ்கள் ஓடாது தொழிற்சங்கம் அறிவிப்பு

சிவகங்கை:தேசிய குறைந்த பட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ.26 ஆயிரம் வழங்க கோரி மே 20ம் தேதி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதால் பஸ்கள் ஓடாது என அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க காரைக்குடி மண்டல பொதுச் செயலாளர் விஜயசுந்தரம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். ஒப்பந்த தினக்கூலி வெளிச்சந்தை முறை, பயிற்சியாளர் போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்ட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். தேசிய குறைந்த பட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போனஸ், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை போன்றவைகளுக்கு உள்ள உச்சவரம்பை நீக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20ல் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடக்க உள்ளது. எனவே அன்று பஸ்கள் ஓடாது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை