மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
8 hour(s) ago
பயிற்சி முகாம்
8 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
8 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
8 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
8 hour(s) ago
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள சின்ன கண்ணனுார் ஊராட்சிக்குட்பட்ட சி.கரிசல்குளம் கிராம கண்மாயில் உடைந்த கலுங்கை சரி செய்ய கடந்த 7 வருடங்களாக கிராம மக்கள் போராடி வருகின்றனர்.மானாமதுரை அருகே சின்ன கண்ணனுார் ஊராட்சிக்குட்பட்ட சி.கரிசல்குளம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வரும் நிலையில் இங்குள்ள கண்மாய் 95 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகிற நிலையில் இக்கண்மாயில் உள்ள கலுங்கு உடைந்து 7 வருடங்களுக்கு மேலாகியும் அதனை சரி செய்ய கோரி கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த வருடம் பெய்த மழையை தொடர்ந்து தற்போது கண்மாய் முழுமையாக நிரம்பி உள்ள நிலையில் மேலும் மழை பெய்தால் கண்மாய் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், தற்போது கண்மாய் முழுமையாக நிரம்பியுள்ளதால் கண்மாய் கலுங்கு பகுதிகளில் மணல் மூடைகளை கொண்டு அடைத்துள்ளோம். இனி தொடர்ந்து மழை பெய்தால் கண்மாய் உடைந்து மொத்த நீரும் வெளியேறி விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அதிகாரிகள் உடனடியாக சி. கரிசல்குளம் கண்மாய் கலுங்கை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago