உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு சான்று

திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு சான்று

திருப்புத்துார்: திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.திருப்புத்துார் அரசு மருத்துவமனை கடந்த ஆண்டு மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக உயர்ந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த ஆண்டில் தேசிய தர நிர்ணய சான்று குழுவினர் ஆய்வு செய்தனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டட வசதி, சிகிச்சை பிரிவு, பிரசவ அறைகளின் தரம், சுகாதார சேவை, பாதுகாப்பை உறுதிபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழுக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.சென்னை எம்.ஜி.ஆர் பல்கலையில் நடந்த அரசு விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தரச்சான்றுக்கான விருதினை மருத்துவமனைக்கு வழங்கினார். திருப்புத்துார் அரசு மருத்துவமனை சார்பாக செவிலியர்கள் அமுதா மற்றும் கண்ணம்மா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மருத்துவ அலுவலர் (பொறுப்பு) ஆமினா பாதம், டாக்டர்கள் சிவக்குமார், முத்துக்குமார், செவிலியர்கள், ஆய்வக நுட்புனர், மருந்தாளுநர், பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி