உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

 கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சர்ச்களில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு திருப்பலிக்கு பின், இயேசு பிறப்பை அறிவித்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். * சிவகங்கை: அலங்கார அன்னை சர்ச்சில் நேற்று முன்தினம் இரவு 11:45 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. நேற்று அதிகாலை 12:00 மணிக்கு இயேசு பிறப்பை அறிவிக்கும் விதமாக குடிலில் இயேசு கிறிஸ்து சிருவத்தை நிறுவினர். பின்னர் மறைமாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் இயேசு பிறப்பை பற்றி விளக்கினார். பாதிரியார் பினேடன், சிவகங்கை பாதிரியார் ஜெபமாலை சுரேஷ், உதவி பாதிரியார் ஸ்டீபன் திருப்பலியை நடத்தினர். நேற்று காலை 8:30 மணிக்கு நடந்த திருப்பலியில் திருநெல்வேலி ஆர்.சி., பள்ளிகளின் கண்காணிப்பாளர் போஸ்கோ குணசீலன், சென்னை பாதிரியார் ஜெபமாலை ராஜா ஆகியோர் இயேசு பிறப்பின் வரலாற்றை எடுத்து கூறி, திருப்பலி நடத்தினர். ஏராளமான கிறிஸ்தவர்கள் திருப்பலியில் பங்கேற்று, ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். சிவகங்கைக்கு பங்கிற்கு உட்பட்ட 14 கிளை சர்ச்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. சிவகங்கை அருகே வல்லனி அன்னை தெரசா சர்ச்சில் பாதிரியார் பிலிப்ஸ் சேவியர் சிறப்பு திருப்பலி நடத்தினார். * தேவகோட்டை: சகாய அன்னை சர்ச்சில் பாதிரியார் அருள் சந்தியாகு சிறப்பு திருப்பலி நடத்தினார். ராம்நகர் உலக மீட்பர் சர்ச்சில் பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில், பாதிரியார் கிளாட்வின், தே பிரிட்டோ பள்ளி ஆசிரியர் பாதிரியார் லெனின், மைக்கேல் உட்பட பங்கு இறை மக்கள் பங்கேற்றனர். புளியால் புனித பெரியநாயகி அன்னை சர்ச்சில் பாதிரியார் சுவாமிநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. * மானாமதுரை: இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் சர்ச்சில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. கோல்கட்டா அமல மரிய மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜேம்ஸ் மைக்கேல் தலைமை வகித்தார். பாதிரியார் ஜான் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். திருச்சி புனித வளனார் கல்லுாரி சர்ச் பாதிரியார் ஆரோக்கியசாமி பங்கேற்றனர். அதிகாலை 12:00 மணிக்கு இயேசு பிறப்பை அறிவித்து, வழிபாடு நடத்தினர். மானாமதுரையில் உள்ள புனித குழந்தை தெரசாள், சவேரியார்பட்டணம், ராஜகம்பீரம் சர்ச்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. * திருப்புத்தூர்: புனித அமல அன்னை சர்ச்சில் பாதிரியார் அற்புத அரசு சிறப்பு திருப்பலி நடத்தினார். குடிலில் இயேசு பிறப்பை சித்தரிக்கும் விதமாக குழந்தை இயேசு, மரியாள் உள்ளிட்டோரின் சிருவங்கள் வைக்கப்பட்டது. பாதிரியார்கள் அருள்மாறன், அந்தோணிராஜா ஆகியோர் கூட்டு திருப்பலி நிகழ்த்தினர். * காரைக்குடி: செக்காலை சகாய மாதா சர்ச்சில் பாதிரியார் சார்லஸ், உதவி பாதிரியார் ஜேசுராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர். திருநெல்வேலி புனித சேவியர்கல்லுாரி முதல்வர் அந்தோணிசாமி இயேசுவின் பிறப்பு குறித்து பேசினார். பாதிரியார் பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செஞ்சை குழந்தை தெரசா சர்ச்சில் பாதிரியார் கிளமெண்ட் ராஜா, சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் ஆரோக்கியசாமி, பாதிரியார் அகஸ்டின், பிரிட்டோ ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை