உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடிமகன்களால் மக்களுக்கு பாதிப்பு

குடிமகன்களால் மக்களுக்கு பாதிப்பு

மானாமதுரை: மானாமதுரை அருகே ராஜகம்பீரம் வைகை ஆற்றுப்பகுதியில் குடிமகன்கள் குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து போடுவதோடு மண்ணில் புதைத்து விட்டு செல்வதால் மக்கள் சிரமப்படுகின்றனர். மானாமதுரை அருகே ராஜகம்பீரம் வைகை ஆற்றுப்பகுதியில் போர்வெல் மற்றும் உறை கிணறு மூலம் குடிநீர் உறிஞ்சப்பட்டு குழாய் மூலம் மானாமதுரை கொண்டு வரப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் ஏற்றப்படுகிறது.பின்னர் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மானாமதுரை பகுதியில் உள்ள மதுக்கடைகளில் மது வாங்கும் குடிமகன்கள்அருகே உள்ள ராஜகம்பீரம் வைகை ஆற்று பகுதிக்கு சென்று குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு சென்று விடுகின்றனர்.இப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுபவர்கள் மற்றும் குடிநீர் திட்ட பணியாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.போலீசார் இப்பகுதியில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை