உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  நகராட்சியில் கலெக்டர் மீண்டும் ஆய்வு

 நகராட்சியில் கலெக்டர் மீண்டும் ஆய்வு

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பொற்கொடி வாக்காளர் தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்கள் வினியோக விவரம் குறித்து கேட்டறிந்தார். சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 38 பூத்களில் 37 ஆயிரத்து 677 வாக்காளர்கள் உள்ள னர். இவர்களுக்கு வீடுகள் தோறும் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வழங்க 38 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நவ.,4ம் தேதி தொடங்கி வீடு வீடாக சென்று படிவங்களை வழங்கி வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியை செய்து வருகின்றனர். டிச.4ம் தேதி இந்த பணி முடிவுக்கு வர உள்ளது.இந்நிலையில் நகரில் பெரும்பாலான வீடுகளுக்கு இன்னும் இந்த சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வந்து சேரவில்லை என புகார் எழுந்தது. இதையொட்டி நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் பொற்கொடி ஆய்வு செய்து படிவம் கொடுக்கும் அலுவலர்கள் தங்கள் பகுதியில் எவ்வளவு படிவம் கொடுத்துள்ளனர். இன்னும் எவ்வளவு படிவம் கொடுக்க வேண்டும் என்ற விவரத்தை கேட்டறிந்தார். கொடுக்கப்பட்ட படிவங்களை விரைவாக பூர்த்தி செய்து வாங்க வேண்டும் எனவும்,விரைவாக அனைத்து வீடுகளுக்கும் சென்று படிவம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கமிஷனர் அசோக்குமார் திருமங்கலம் நகராட்சி யில் இருந்ததால் பொறியாளர் அறையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார். படிவம் பூர்த்தி செய்யத்தெரியாதவர்கள் இருந்தால் அவர்களுக்கு படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை கூறி தெளிவாக படிவத்தை பூர்த்தி செய்து பெற்றுக்கொள்ளவேண்டும். டிச.4க்குள் 37 ஆயிரத்து 677 வாக்காளர் படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்து பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை